கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வின்சன் உயர்தர தேசியப் பாடசாலை முதலிடம்.

(மா.சசி)
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை 79 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கத்தின் வழிகாட்டலில் மாவட்ட மட்டத்தில் 32 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மாகாண மட்டத்தில் 32 போட்டிகளில் வின்சன் பாடசாலை மாணவாகள் பங்கு கொண்டு 11 போட்டிகளில் முதலிடத்தினையும் 7 போட்டிகளில் இரண்டாமிடத்தையும் 3 போட்டிகளில் மூன்றாமிடத்தையும் பெற்று மொத்தம் 21 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 79 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இப் போட்டி கடந்த 19 ஆம் 20ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.