மகிழவெட்டவான் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

(மா.சசி)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கட்பட்ட மகிழவெட்டவான் மகாவித்தியாலயத்தில் இன்று ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் மாணவர்கள் இணைந்து நடாத்திய இந் நிகழ்வு பழைய மாணவரான கோ.அருளானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

பழைய மாணவர்கள்,பெற்றோர்கள், மாணவர்களால் ஆசிரியர்கள் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் அதிபரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய வி.தங்கத்துரை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் அதிபர் ஆசிரியர்கள் முன்னாள் அதிபர்களான க.அருள்நாதன்,எஸ்.பத்மநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.இதன் போது கல்விசாரா ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்

இதே வேளை ஆசிரியர்கள் மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.