(தில்லை)
கல்முனை பெரிய நீலாவணை -01ஐச்சேர்ந்த கனகசிங்கம் -ரவீந்திரன் கல்முனை நீதி நிருவாக மாவட்டத்திற்கான சமாதான நீதிவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் காலஞ்சென்ற இராசையா-கனகசிங்கம் ஓய்வு பெற்ற கிராம அலுவலர், மற்றும் சமாதான நீதிவான், அவர்களதும் சிவநாதன் நடேஸ்வரி ஆகியோரின் மூத்த புதல்வனும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளரும் ஆவார்.
சிறந்த சமூகசேவையாளரான இவர் பல பொதுச்சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார். இவரின் சேவையினைப்பாராட்டி 2012ஆம் ஆண்டில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா, முன்னால் கிழக்கு மாகாண முதலமச்சர் சிவனேசதுரை-சந்திரகாந்தன் அவர்களாளும் சாமஸ்ரீ தேசமானிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













