மட்டக்களப்பு மாவட்­டத்தில் உதை­பந்­தாட்ட விளை­யாட்டு மீண்டும் புத்­துயிர் பெற்­றுள்­ளது

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அண்மைக் காலங்­களில் ஏற்­பட்ட போர் அனர்த்­தங்கள், சுனாமி அனர்த்­தங்கள் போன்­ற­வற்றால் உதை­பந்­தாட்ட விளை­யாட்டு சற்று பின்ன­டைவை அடைந்­தி­ருந்­தாலும் இன்று மீண்டும் புத்­துயிர் பெற்று வரு­வதை காண்­கிறோம் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராசா தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு நாவ­லடி ‘‘கோல்பிஸ்’’ விளை­யாட்டுக் கழகம் மாவட்ட ரீதியில் நடத்­திய உதை­பந்­தாட்ட போட்­டியில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
உதை­பந்­தாட்டம் மட்­டு­மல்ல கிரிக்கெட், கரப்­பந்­தாட்டம் போன்ற விளை­யாட்­டுக்­க­ளிலும் இம் மாவட்டம் முன்­னேறிக் கொண்டு வரு­வதை நாம் பாராட்­டாமல் இருக்க முடி­யாது. இதற்கு இம்­மா­வட்­டத்தில் பணி புரி­கின்ற விளை­யாட்டுத் துறை அதி­கா­ரிகள் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள்.

இன்று மட்­டக்­க­ளப்பின் கிழக்கு பகு­தியில் மட்­டு­மல்­லாமல் மேற்கு பகு­தி­யிலும் இவ்­வா­றான விளை­யாட்­டுக்­களை மின்­னொ­ளியில் மாவட்­டத்தின் வீரர்கள் விளை­யாடிக் கொண்டு வரு­வதை காண்­கிறோம்.
விளை­யாட்டின் மூலம் ஓய்வு நேரத்தை இளை­ஞர்­களும் யுவ­தி­களும் நன்­றாக பயன்­ப­டுத்தக் கூடிய ஒரு துறை விளை­யாட்­டாகும். அல்­லாது விட்டால் சமூகச் சீர்­கே­டு­களில் இளை­ஞர்கள் பங்கு கொண்டு ஒரு கெட்ட சமூ­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்­பாக இருக்கும். ஆகவே தான் நாம் இத்­துறையை ஊக்­கு­விப்­ப­தற்­காக சில விளை­யாட்டு கழ­கங்­க­ளுக்கு நிதி உத­வி­களை வழங்கி வரு­கின்றோம்.

அந்த வகையில் எம்­மி­ட­மி­ருந்து நிதி உதவி பெற்ற கழ­கங்­களில் ஒன்­றான நாவ­லடி கோல்பிஸ் விளை­யாட்டு கழகம் இன்று முத­லா­வது இடத்­தினை பெற்­றி­ருப்­ப­தை­யிட்டு பெரு­மை­ய­டை­கின்றேன்.
இன்று எமது நாட்டில் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் 18 வய­திற்கு கீழ் திரு­மணம் செய்­கின்ற விகி­தா­சாரம் 6 வீத­மாக இருக்­கி­றது. அதேநேரத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் இதில் 12 வீத­மாக உள்­ளது. இது எமக்கு கவ­லையை அளிக்­கி­றது. இது ஏன் என்­ப­தை­யிட்டு நாங்கள் ஆராய வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கிறோம்.

இது வறு­மையின் தாக்­கமா? அல்­லது கல்­வியின் பின்­ன­டைவா? என்­பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்­டி­ய­தாக உள்­ளது. இளம் வயது திரு­ம­ணங்­களில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­களை பெற்றுக்கொள்ள முடியாது. அது மட்டுமல்லாமல் குடும்­பத்தை நடத்தக் கூடிய கல்வி மற்றும் பொருளாதாரத்தை கூட இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் எமது சமுதாயம் ஒரு சீரழிந்த சமுதாயமாக மாறக் கூடும் என்றார்.