இவர்களுக்கான பசுக்கள் அவர்களின் வறுமை நிலையினை அடிப்படையாகக் கொண்டு 8அங்கத்தவர்களுக்கு தலா 75000தொடக்கம் 80000 ஆயிரம் பெறுமதியான 8 பசுக்கள் வழங்கப்பட்டது. இதிலிருந்து தைமாதம் கன்றுகள் ஈன்று பால் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் இவை அனைத்தும் சினைப்படுத்ல் செய்யப்பட்டுள்ளதை கால் நடை வைத்தியரின் சான்றுதள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அத்தோடு இவற்றில் இருந்து பெறப்படும் பசும்பாலுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுக்க சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் இவர்களுக்கு ரூபா.25000 பெறுமதியான பண்னை ஒன்றும் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்படுகின்றது.பெற்றுக் கொள்ளப்பட்ட பசுக்களின் பெறுமதியில் அரைப் பெறுமதி பால் பெற்றுக் கொள்ளத் தொடங்கியதன் பின்னர் இரண்டு வருட காலதில் சங்கத்திற்கு திரும்பிச்செலுத்துதல் வேண்டும்.
இன்நிகழ்வின் போது சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் தே.மயூரன், மட்.கால் நடை வார்ப்போர் கூட்டுறவச்சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞசன், தலைவர் த.காண்டீபன், உபதலைவர் கௌ.நிரோசன் மற்றும் சங்க பணியாளர்கள்,அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












