தில்லை -
இனிமையான சிறுவர் பாடல் தொகுப்பினை தேசத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கும் நோக்குடன் கலாசார திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட அருணோதய 2013 என்ற திட்டத்தில் மட்/பட்டிருப்பு.எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் கே.தர்சினி தேசியமட்டத்தில் முதலாமிடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்.
அருணோதய 2013 அகில இலங்கை நிதியம் சிறுவர் பாடல் இருவெட்டிற்கான போட்டிகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்டு. கோட்டமட்டம், வலயமட்டம் மாகாணமட்டங்களில் வெற்றி பெற்று தேசியமட்டத்திலும் முதலாமிடத்தினை பெற்றமைக்கான பரிசில்தனை அண்மையில் கொழும்பு மருதானை டவர் கோல் மண்டபத்தில் இம்மாணவி பெற்றுக்கொண்டார்.
இவரைப்பாராட்டுமுகமாக பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்திசபை, பழையமாணவர்கள் ஒன்றினைந்து பாடசாலை மண்டபத்தில் பாராட்டு விழாஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்போது அம்மாணவியை மலர்மாலை அணிவித்து பாராட்டி கௌரவித்ததோடு , பரிசுப்பொருள் வழங்கிவைத்தனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













