மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பறங்கியர் தினக் கொண்டாட்டம்..

மட்டக்களப்பு சின்ன உப்போடை சமுக கலாச்சார மண்டபத்தில் இலங்கை போர்த்துக்கேய பறங்கியர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்தந்தை கலாநிதி பிரான்ஸிஸ் சேவியர் டயஸ் அவர்களின் தலைமையில் இன்று 2013.10.27 திகதி   பறங்கியர் தினக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால் பெரேரா அவர்களும் ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பாளர் மலர்ச்செல்வன் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞானங்கள் பீட விரிவுரையாளர் வைத்தியர் ராகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது புலமைப்பரிசில் சித்தி பெற்ற பறங்கிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு  அதிதகளும் கௌரவிக்கப்பட்டனர்.

             -சுஜி