எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது வழங்கும் நிகழ்வு

( சிவம் ) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது 2012 , 2013 மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரி மண்டப கவிஞர் எருவில் மூர்த்தி அரங்கில் இன்று நடைபெற்றது.

உயர் தமிழியல் விருது – 2013 மூத்த படைப்பாளி அன்புமணி இரா நாகலிங்கத்திற்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ப. யோகானந் வழங்கி வைத்ததார்.


நூல்களுக்கான தமிழியல் விருதுகளுடன் ரூபாய் 10,000 மற்றும் 15,000 பணப்பரிசுகளை மட்டக்களப்பு மாவட்ட  அரச அதிபர் பி.எஸ். எம். சாள்ஸ் , வைத்திய நிபுணர் ப. யோகானந் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் த. பாஸ்கரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் இலக்கிய போட்டி அதன் பணிப்பாளர் பொன் செல்வநாயகத்தினால் ஆசிரியைக்கு வழங்கி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

சிறுகதை, நாவல், கவிதை, சிறுவர் இலக்கியம், நாடகம், ஆவணமாக்கல், சமயம், வரலாறு, ஆய்வு, மொழிபெயர்ப்பு,இனநல்லுறவு, ஓவியம், பதிப்பு ஆகிய துறைகளிலலும் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் உட்பட 60 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.