நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கும் பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலய வீதி

(உ.உதயகாந்த்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை கிராமத்தின் சுனாமி வீட்டு திட்டத்தின் குடியிருக்கும் அறுநூறிட்கு மேற்பட்ட குடும்பங்கள் நாளாந்தம் பிரயாணிக்கும் சரஸ்வதி வித்தியாலய வீதியானது கடந்த 2005 ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்பு இன்று வரைக்கும் செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக இருப்பது ஏன்?

தேசத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டங்கள் அதிகளவில் நடைபெற்ற வண்ணம் இருக்கும் அம்பாற மாவட்டத்தில் ஏன் இவ்வாறாக இவ் வீதியானது கவனிப்பாரற்று இருக்கின்றது.

இம் மாவட்டத்திற்குரிய அரசியல் பிரமுகர்களும் , கல்முனை மாநகர சபையும் இவ் வீதியை புனரமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்காமல் கவலயினமாக இருப்பது ஏன்? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

உரிய அதிகாரிகள் மக்களின் தேவைய்ப்பாட்டினை கருத்திட் கொண்டு இவ் வீதியை மிக விரைவில் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவார்கலென நம்புகின்றனர்.