வி.ரி.சகாதேவராஜா -
சர்வதேச ஆசிரியர் தினவிழா காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை அதிபர் இ.ரகுபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன கலந்து சிறப்பித்தார். மற்றும் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.
அங்கு வாழ்த்துப்பாவை கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கம் இசைத்தார்.
கல்வி கற்பிக்கின்ற ஆசிரியைகளுக்கு குடைப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்கள். கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினைச் செய்த பியசேன எம்.பிக்கு அதிபர் பொன்னாடைபோர்த்திப் பாராட்டினார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின.
















