மட்டக்களப்பு சிவானந்தா பழைய மாணவர் சங்க அவுஸ்த்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரங்கள் வழங்கும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின் தங்கிய பகுதியாக கடுக்காமுனை வாணி வித்தியாலய மாவணவர்களுக்கு இலவச கற்றல் மற்றும் பாடசாலை உபகரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 22-10-2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி திரு.ந.தயாசீலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்) கே.குணசேகரம் அவர்களும் கலந்து கொண்டார்.












