வேப்பவெட்டுவான் கிராமத்தில் நடைபெற்ற திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு!

   ஜனாதிபதிஅவர்களின் நிறைவான இல்லம் வளமானதாயகம் எனும் கருப் பொருளுக்கமைவாக திவிநெகும  தேசியநிகழ்ச்சித் திட்டத்தின் 5ம் கட்ட ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் பற்று வேப்பவெட்டுவான் கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வேப்பவெட்டுவான் கிராம சேவகர் பிரிவின் மாவடி ஓடை கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ப.சுமன் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் இன்று(11.10.2013) காலை 10.11 மணி சுப வேளையில் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் என்பன நடப்பட்டது.

இன்நிகழ்வில் கிராம சேவையாளர் திரு. கோபு , சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் பொருளாதார மீளெழுச்சி உத்தியோகத்தர் வேப்பவெட்டுவான் பாடசாலை அதிபர், மாவடி ஓடை இராணுவ அதிகாரிகள், மதத்தலைவர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கிராம மக்கள், விவசாயிகள், திவிநெகும பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.