ஊடக தர்மத்தை இறுதிவரை கடைப்பிடித்த பத்திரிகையாளனாக திகழ்ந்தவர்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா செயலாளர் க.சரவணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அனுதாப அஞ்சலியில் மேலும் தெரிவிக்கபபட்டுள்ளதாவது.
நாம் ஊடகத்தில் இணைகின்றபோது நல்ல வழிகாட்டியாக சிறந்த ஆற்றுப்படுத்துனராக பரிணமித்த நடா சாமானியமான ஊடகவியலாளரல்ல. அவரிடமுள்ள தனிச்சிறப்பு அமைதியாகவிருந்து கடமையைச் செய்வது. கையிலே சுருட்டு அதிகம் பேச்சில்லை.
துன்னாலை வடக்கை பிறப்பிடமாக கொண்ட நடராசாவிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாற்றி வருகின்றனர்.அவர் வீரகேசரியில் செய்தி ஆசிரியராக பிரதம ஆசிரியராக கடமையற்றிய காலத்தில் அவரது கண்காணிப்பில் சேவையாற்றினோம் என்கின்றபோது பெருமையாயிருக்கிறது.
இதேவேளை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான எஸ் நடராஜா அவர்களின் இயற்கை மரணம் தமிழ் இதழியல் துறைக்கு பேரிழப்பாகும் .

1950களின் முற்பகுதியில் வீரகேசரியில் தனது பணியை ஆரம்பித்த எஸ்.நடராஜா 1984 ஆம் ஆண்டு செய்தி ஆசிரியராகவும் 1996 ஆம் ஆண்டு பிரதம ஆசிரியராகவும் பதவியேற்று 2005ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். அவர் பத்திரிகைப் பணியில் இருந்து ஓய்வுபெறும் வரை பல தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கினார்- வழிகாட்டினார்.
தன்னுடைய நீண்டகால அனுபவங்களை ஆசிரியர் தலையங்கங்களில் காண்பித்தார் .ஊடக ஒழுக்க நெறிஇ இதழியலுக்கான எழுத்து நடைஇ மொழிப்பயன்பாடு போன்ற விடயங்களை புதிய செய்தியாளர்களின் தரங்களுக்கு ஏற்ப சொல்லிக் கொடுப்பதில் தனித்துவம் மிக்கவர் நடராஜா. தமிழர்களுடைய அரசியல் அபிஷைகளுக்கான கோரிக்கைகள் அஹிம்சைப் போராட்டமாகவும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் மாறிய காலப்பகுதிகளில்; வீரகேசரியில் மூத்த உதவி ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றிய அவர் போராட்டங்களின் நியாயப்பாடுகளை தனது எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.
போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. ஊடகத்துறையில் 49ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அமரர் நடராஜா அவர்கள தமிழ்மணி விருதுஇ வாழ்நாள் சாதனையாளர் விருது என்பவற்றையும் பெற்றார். ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் அரசியல் தலைவர்கள் என பலரினதும் நன்மதிப்பையும் பெற்ற அவர் ஊடகத்துறை பணியிலிருந்து ஓய்வு பெறும்வரையில் பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கித் தந்தவர்.
.அரசியல் கட்சிகளின் கருத்துக்களை தனதாக்கிக் கொள்ளக் கூடாது என்பதும் பிரச்சினைகளை கூறுவதும்- அதற்கான தீர்வுகளை முன்வைத்து எழுதுவது மட்டுமே ஒரு பத்திரிகையாளனுடைய பணியாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஆசிரிய பீடத்தில் அடிக்கடி கூறுவார்.
அமரர் டேவிற் ராஜ் வீரகேசரியில் செய்தியாளராக இருந்தபோது மூத்த உதவி ஆசிரியர்களாக நடராஜாவும் அமரர் கார்மேகமும் சமாந்தரமாக பணியாற்றி ஆசிரிய பீடத்தை வழி நடத்திய அந்த ஊடக கலாசரம் அற்புதமானது. ஆசிரிய பீடம் ஒன்று எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் காட்டிய அந்த கலாசரம் இன்று முன் உதாரணமாக அமைந்துள்ளது.
'குருவி' 'வாயாடி' என்ற புனை பெயர்களில் அவர் எழுதிய பத்தி எழுத்துக்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவை. இயல்பான மொழி நடையில் பேராசியர்கள் முதல் பாமர மக்கள் வரை வாசிக்கக்கூடி முறையில் அவருடைய எழுத்துக்கள் அமைந்திருக்கும்.
1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும்இ தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர்.

மூத்த ஊடகவியலாளரான அமரர் செல்லையா நடராஜா அவர்களின் இழப்பானது தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் ஊடகத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தமிழ் நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னாரின் குடும்பத்தினர் ஊடகத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்