அறுகம்பையில் வெளிநாட்டு பிரஜைகள் மீது தாக்குதல்

அம்பாறை அறுகம்பை உல்ல பகுதியில் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கான காரணம்  என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.