தன்னாமுனையில் 'ஞானபுத்திரன்' வடமோடிக் கூத்து (கத்தோலிக்கக் கூத்து) அரங்கேற்றம்.

(கௌரீஸ்வரன் )
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள தன்னாமுனையைச் சேர்ந்த பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களால் பயிலப்பட்ட 'ஞானபுத்திரன்' எனும் வடமோடிக் கூத்தின் அரங்கேற்றம் எதிர்வரும் 19.10.2013 சனிக்கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை வரைக்கும் தன்னாமுனையில் இடம்பெறவுள்ளது.

தன்னாமுனையைச் சேர்ந்த மூத்த கூத்துக்கலைஞர்களுடன் இளைய கூத்துக் கலைஞர்களும் சிறுவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இக்கூத்தில் பாத்திமேற்றுப் பயின்று வருகின்றார்கள்.கடந்த 09.10.2013 ஆந் திகதி இக்கூத்தின் சதங்கையணி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது.சதங்கையணி விழாவின் ஆரம்ப வைபவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் அதிதியாகக் கலந்து சமகாலத்தில் கூத்தரங்கின் முக்கியத்துவம் பற்றி உரையாடி கூத்துக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி அவர்களைப் பாராட்டினார்.

அரங்கேற்ற விழாவிற்கு வருகை தந்து மகிழ்வுறுமாறு கூத்து ஆர்வலர்களை தன்னாமுனை கூத்துச் சமூகத்தினர் அழைக்கின்றார்கள்.