மட்டக்களப்பு வின்சன் மகளீர் பாடசாலை மாணவி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.

( மா.சசி ,சிவம் ) 5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசியப் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவி சதாசிவம் தனுசனா 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.

படுவாங்கரையின் விளாவெட்டுவானை சேர்ந்த கல்லடியில் வசிக்கும் பல் வைத்தியர் முரளிதரன் ஆயள்வேத வைத்தியர் காயத்திரி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியான கவிலாஸ்னாவே மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இன்று பரீட்சை முடிவு வெளியானதை அடுத்து பாடசாலைக்குச் சென்ற மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபரும் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி சுஜாதா குலெந்திரன் ஆகியோர் மாணவியை வாழ்த்தியதுடன் பரிசிப் பொரட்களும் வழங்கிக் கௌரவித்தனர்.

இதன் போது மாணவியின் வகுப்பு ஆசிரியர் செல்வி எஸ்.ராதிகாவிற்கும் பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கத்திற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

வின்சன் உயர்தர மகளீர் தேசியப் பாடசாலையில் 41 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு வேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்

193 மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற செல்வி முரளிதரன் கவிலாஸ்னாவுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி வாழ்த்துத் தெரிவித்து பரிசு வழங்குவதனையும் கல்குடா வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் மற்றும் அதிபர் வகுப்பாசிரியர் ஆகியோருடன் பெற்றார் நிற்பதனையும் படங்களில் காணலாம்.