ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம் பெற்று வரும் நிலையில் வருடம்தோறும் ஆலய உற்சவத்தினை சிறப்பிக்கும் முகமாக இந்த பாற்குடபவனி இடம் பெற்று வருகிறது.
மாங்காடு தசவிநாயகர் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று பால் குடங்களை ஏந்தியவண்ணம் அடியார்கள் சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயத்தினை நோக்கி வந்தனர்.இந்த பாற்குட பவனில் நூற்று கணக்கான பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஆலயத்தினை பாற்குடபவனி வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூசைகள் ஆலய பிரதம குரு தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது நாட்டில் சாந்தியும் நிரந்தர சமாதானமும் நிலவும் அரசுக்கு நல்லாசியும் வேண்டி வழிபாடுகள் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.












