சுனாமி ஒத்திகை இன்று (11.10.2013) மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் நடைபெற்றது.
சர்வதேச அனர்த்த ஆபத்து தனிக்கை தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமீன மtsunடுக்கிராமத்தில் இந்த சுனாமி ஒத்திகை நடைபெற்றது.
இன்று பிற்பகள் 3.15மணிக்கு அனர்த்த அபாய ஒலி இக்கிராமத்தில் எழுப்பப்பட்டதும் மக்கள் ஓடோடி அந்த கிராமத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து அங்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விழிப்புனர்வூட்டும் நடவடிக்கை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மேஜர் ஆர்.டி.பி.ராஜபக்ச உட்பட கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த முன்னாயத்த குழுக்கள் இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது இராணுவத்தினர் முதலுவிச் சிகிச்சை மற்றும் ஒத்திகையின் போது சுகயீன முற்றவர்களை பாடசாலைக்கு கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.












