ஏறாவூர் பற்று மேற்கு கல்விக்கோட்டத்தின் பரிசளிப்புவிழா கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசபிள்ளை அவர்களின் தலைமையில் மட் /கரடியனாறு மகாவித்தியாலயத்தில் இன்று 29.10.2013 ம் திகதி இடம் பெற்றது.
கடந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருமாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறாதமையால் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அதிபர்கள்,ஆசிரியர்களின் கூட்டு முயற்சியுடனும் நேசக்கரம் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் வதிவிட வகுப்பு நடாத்தியதன் பயனாக 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலாகவும் 40 மாணவர்கள் 100புள்ளிகளுக்கு மேலாகவும் 43 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலாகவும் பெற்றுள்ளனர். இம் மாணவர்களையும் அகில இலங்கைரீதியாக போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களையும் பிரதீபாபிரபா விருது பெற்ற ஆசிரியர்களையும் கௌரவிக்கும் முகமாக இப் பரிசளிப்புவிழா இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ.போல் அவர்களும் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களும்; நேசக்கரம் பிறைட் பியுச்சர் நிறுவனத்தின் அமைப்பாளர் ஜனன் அவர்களும் அரவணைப்பு நிறுவனத்தின் தலைவர் றோசான் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 166 புள்ளிகளைப் பெற்ற கே.சாளினி அவர்களுக்கு துவிச்சக்கரவண்டியும் ஏனைய மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டதுடன் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கம்இ பிரதீபா விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது. ஆத்துடன் வதிவிட வகப்புக்களுக்கு இணைப்பாளர்களாக செயற்பட்ட எஸ்.மோகன்ராஜ்,பீ.குமாரலிங்கம் அகிய ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
மேலும் இதன்போது,முண்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர்,வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் போன்றொருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.












