வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு

(த.ரமணன் )
கல்குடா கல்வி வலயத்திலுள்ள  மட்/ககு/வாழைச்சேனை  இந்துக்கல்லூரியில் இன்று 8ம் திகதி ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலையின் அதிபர்.க.தவராஜா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வு பாடசாலை அதிபர் , உப அதிபர்களால் கேக் வெட்டப்பட்டு கோலகலமாக ஆரம்பமானது இதன் போது 13ம் தர மாணவர் மாணவிகளால் அனைத்து  ஆசிரியர்களுக்கும் ரோஜா மலர்கள் கொடுக்கப்பட்டு வாழ்த்துக்கள்  தெரிவிக்கப்பட்னர்.
மேலும் இப்  பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுவரும் ஆசிரியர்களுக்கு அதிபர் பாராட்டினார்.

மேலும் இந் நிகழ்வில் ஆசிரிய தின நினைவு சின்னங்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு 13ம் தர மாணவர்களினால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் , இதன் போது ஆசிரியர்,மாணவர்களின் கலை நிகழ்வு இடம்பெற்றன.​