கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் மணல்சேனை ஆகிய தமிழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் இரவு, அதிகாலை வேளையில் தூர இடங்களில் இருந்து வருவோர் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் மாடு, ஆடு, கோழி போன்றவற்றின் கழிவுகள் வீதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வீசப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இவ்வாறான செயலில் ஆடு, மாடு, கோழி விற்பனையில் ஈடுபடும் நபர்களே ஈடுபடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

.jpg)