மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் ஜே. சுதர்சன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி நகர மணிக்கூட்டுக் கோபுரம், திருமலை வீதி, புகையிரத நிலைய வளியாள கோட்டைமுனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சென்றடைந்தது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கலாசாலை மண்டபத்தில் கிழக்கு பிராந்திய தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனத்தினரின் பாடல்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு லயன்ஸ் கழகப் பணிப்பாளர் ஏ. செல்வேந்திரன், தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனத்தின் தலைவர் எம். வடிவேல், லயன்;சபையின் பிரதி செயலாளர் என். வி. ரஞ்சன், தரிசனம் விழிப்புலனற்றோர் பட்டதாரி மாணவன் என். கிருஷ்ணகுமார், சம்மேளத்தின் செயலாளர் எஸ். இதயராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி கடந்த 1992 முதல் இவ்வாறான விழிப்புணர்வு ஊர்வலங்களை மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.












