குளிர்பானம் விற்பதற்காக சென்ற மூவர் மீது தாக்குதல்


காங்கேயனோடை கிராமத்தில் குளிர்பானம் விற்பதற்காக சென்ற மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன் இவர்கள் பயணித்த வாகனமும் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

காங்கேயனோடை கிராமத்திலுள்ள கடைகளுக்கு குளிர்பான விற்பதற்காக வாகனமொன்றில் மூன்று பேர் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், மேற்படி குளிர்பான வாகனம் தமது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி வாகனத்தின் மீதும் மற்றும் அதில் பயணித்த விற்பணையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இழக்கானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்தனர்.