கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்

(சிவம்)சிறுவர்களின் திறமைகளையும் மற்றும் ஆழுமைகளையும் வெளிப்படுத்தும் களமாக இன்றைய உலக சிறுவர் தினம் அமைந்தது.

மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வோதயம் மற்றும் எஸ்கோ என்பன இணைந்து மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தையொட்டி சிறுவர்களின் நிகழ்வுகள் அதிபர் எஸ். சிவக்கொழுந்து தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றன.

இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்கள் அவர்களின் உரிமைகளைக் காப்பது எம் கடமை என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா பிரதம அதிதயாக கலந்து உரையாற்றியதோடு திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

வரவேற்பு நடனம், மயில் நடனம், பாட்டு, சிறுவர் நாடகம் என் பல்வேறு சிறுவர்களின் உரிமைகளைகாக்கும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சத்தியநாதன், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர, மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பாளர் பொலிஸ் பரிசோதகர் கே. சுலாசிறி மாவட்ட சர்வோதய இணைப்பாளர் ஆர்;. மதன், எஸ்கோ பிரதிநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.