மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள வேப்பவெட்டவான் அ.த.க.பாடசாலையில் நேற்று 7ம் திகதி ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலையின் அதிபர்.என்.ரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அதிகாரி சுகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் முன்நின்று செயற்பட்டனர். இதன்போது இக் கல்விக் கோட்டத்தில் 5ம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்கு இணைப்பாளராக இருந்து முன்நின்று செயற்பட்ட எஸ்.மோகன்ராஜ் ஆசிரியர் அவர்களுக்கு கல்வி அதிகாரியினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இப் பாடசாலையில் அபிவிருத்திக்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுவரும் எஸ்.துரைராஜா ஆசிரியர் அவர்களையும் பாராட்டினார். அத்துடன் இப் பாடசாலையில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு உதவிகள் புரிந்து, பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிவரும் உ.உசாந்தினி அவர்களையும் பாராட்டினார்.












