வரட்சியான காலநிலை காரணமாக சவளக்கடை 7ஆம் கிராமம் மற்றும் 15 ஆம் கிராமம் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது கடும் வரட்சி நிலவுகிறது.இயல்பாகவே சவளக்கடை 7ம் கிராமம், 15ஆம் கிராமம் ஆகிய பகுதிகளில் கோடை காலத்தில் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. குடிநீரை பெறுவதற்காக சுமார் 1½ கிலோமீற்றர் தூரம் அயல் கிராமங்களுக்கு கால்நடையாக செல்ல வேண்டிய அவலநிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சவளக்கடை கணேசா வித்தியாலயத்தில் கிணறு இருந்தும் நீரின்றி இப்பாடசாலை மாணவர்கள் குடி நீருக்காக பெரும் சிரமப்படுகின்றனர்.
குடிநீர்த் தேவையை சமாளித்தாலும், கழிவறைப் பாவனைக்குரிய நீரை எவ்வாறு பெறுவது?. இப்பகுதியின் வலயக்கல்வி அலுவலகம் இது விடயத்தில் பராமுகமாயிருப்பது வேதனைக்குரியது.

.jpg)