சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

 (அபிவரன்;)
அம்பாரை தமண பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை நேற்று மாலை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமண பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் மடவலந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் இவரிடம் இருந்து 1- 4ஃ3 போத்தல் அரச மதுபானங்கள் மீட்கப்பட்டன.
இச் சம்பவத்தில் கைதுசெய்தவரை இன்று பொலிஸ்பிணையில் விடுவித்து எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யவுள்ளதாக தமண பொலிசார் தெரிவித்தனர்.