மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

(சிவம்) மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி வணக்கத்திற்குரிய எம். எலிசபத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 100 ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் தீசன் ஜெயராஜ் மற்றும் மாணவர்களால் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.