இந்து சமய கலாசாரத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இவ்விழாவில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகைதந்த கலைஞர்களின் ஆற்றுகைகளும் அளிக்கைகளும் நடைபெற்றன.
குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அம்பாறை, இறக்காமம், திருகோணமலை, மலையகத்தின் பண்டாரவளை, ஹட்டன், மற்றும் மட்டக்களப்பு பாரம்பரியக் கலைஞர்களின் கோவலன் கூத்து, காமன்கூத்து, கலகாட்டம், வாசாப்பு, பறங்கியர் சமூகத்தின் கப்பிறிஞ்ஞா, பறைமேளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் ஆள்ளுகை செய்யப்பட்டன.












