கல்லாறு றோசாலயா கலை கலாசார பொது சேவைகள் நிலைத்தினால் பட்டிருப்புக் கல்வி வலய தென் பகுதி கிராமியப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட ஆங்கில எழுத்துக் கூட்டற் போட்டியில் அதிதிகள் அழைத்துவரப்படுவதனையும்>சுடர் ஏற்றுவதனையும் உரையாற்றுவதனையும் மாணவர்கள் போட்டியில் பங்குபற்றுவதனையும்> வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக்கேடயத்துடன் பதக்கங்கள் அனுவிக்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.
கல்லாறு றோசாலயா கலை கலாசார பொது சேவைகள் நிலைத்தினால் பட்டிருப்புக் கல்வி வலய தென் பகுதி கிராமியப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட ஆங்கில எழுத்துக் கூட்டற் போட்டியில் பின்வரும் பாடசாலைகள் ஞாபகார்த்த சவால் கிண்ணங்களை சுவீகரித்துக் கொண்டன விபரம் பின்வருமாறு,
தரம் ஐந்து மாணவர்களுக்கிடையேயான இறுதிப் போட்டியில் பெரிபயல்லாறு விநாயகர் வித்தியாலயம் அமரர் தொழில் அதிபர் எஸ்.அருணகிரி ஞாபகார்த்த கிண்ணத்தை சுவிகரித்தது. தரம் ஆறு இறுதிப் போட்டியில் கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயம் அமரர் டாக்டர் கனகராஜா ஞாபகார்த்த கிண்ணத்ததை சுவிகரித்துக் கொண்டது.
தரம் எழு இறுதிப் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அமரர் ஆங்கில ஆசிரியர் எச்.லூயிஸ் ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது. தரம் எட்டு இறுதிப் போட்டியில் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் அமரர் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ரி.அழகரெட்ணம் ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
தரம் ஒன்பது இறுதிப் போட்டியில் கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயம் அமரர் அதிபர் எம்.பொன்னையா ஞாபகார்த்த கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது. தரம் பத்து இறுதிப் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஒப்பந்தக்காரர் எம்.தம்பிராஜா ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை சுவிகரித்தக் கொண்டது.
தரம் பதின்ஒன்று இறுதிப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலயம் அமரர் தொழிலதிபர் (சுவீஸ்) குகதாஸன் ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
இவர்களுக்கான ஞாபகார்த்த சவால் கிண்ணங்களை பிரதம அதிதி மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் தலைவர் எஸ்.எஸ்.சவுந்தரநாயகம் மத்தியமாகாண உட்கட்டமைப்பு பணிப்பாளர் பொறியியலாளர் பொ.சுரேஸ் பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் தொழிலதிபர் பி.கோபி சுற்றாடல் நிபுணர் ரி.விமல் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம் திருமதி.ச.கனகராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.














