மண்முனை மேற்கப் பிரதேச செயலக வாணி விழாவும் கலைவாணி கல்வி முன்னெடுப்புத் திட்டமும் இன்று பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
கல்விக்கரசி சரஸ்வதிக்குரிய விழா இன்று அரம்பமான நிலையில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக வாணிவிழா நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மட்டக்களபட்பு மாவட்டத்தில் உள்ள வறிய சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச செயலகங்களில் வாணி விழா கொண்டாடும் வேளையில் கலைவாணி கல்வி முன்னெடுப்புத் திட்'டத்தினை முன்னெடுக்குமாறு பிரதேச செயலளர்;களிடம் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாணி விழா கொண்டாடப்படுகின்ற நிலையில் வாணி விழாவிற்கு சேகரிக்கப்படுகின்ற நிதியில் இருந்து ஒவ்வொரு பிரதேச செயலகங்களினாலும் 2014 ஆம் ஆண்டு பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு சேரவிருக்கும் 10 வறிய சிறார்களைத் தெரிவு செய்து அவர்களுக்குத் தேழைவயான பாடசாலை உபகரணங்களை வழங்கி கலைவாணி கல்வி முன்னெடுப்புத் திட்டத்தினை முன்னெடுக்குமாறும் இத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட குறித்த 10 சிறார்களும் பல்கலைக் கழகம் செல்லும் வரை தொடர்ச்சியாக வருடா வருடம் கற்றல் உபகரணங்கள் மற்றும் முடியுமான உதவிகளை வழங்கி அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு இத் திட்டத்தினை முன்னெடுக்குமாறு வேணடுகோள் விடுத்துள்ளார்.
இந் நிலையில் இன்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் வாணி விழா கொண்டாடிய நிலையில் 2014ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லவிருக்கும் 10 சிறார்களுக்கு புத்தக வேக் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இத் திட்டத்தினுடாக இச் சிறார்களுக்கு வருடா வருடம் கல்விக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் நிகழ்வின் போது தெரிவித்தார்.
--












