பட்டிபளையில் கெயார் -Palm நிறுவனத்தினூடாக வாழ்வாதார திட்ட உபகரணங்கள் வழங்கிவைப்பு

கடந்த ஆண்டில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட பட்டிபளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, கடுக்காமுனை, மகிழடித்தீவு -தெற்க்கு, அம்பலாந்துறை -வடக்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் திட்டத்தினை கெயார்(CARE) சர்வதேசம் Palm Foundation ஊடாக அமுல்படுத்திவருகிரது அதன் ஒருகட்டமாக 100 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 24ம் திகதி மகிழடித்தீவு தெற்க்கு கிராம சேவகர் அலுவகத்தில் நடைபெற்றது,

இன் நிகழ்வின் போது கெயார்(CARE) நிறுவன திட்ட இணைப்பாளர் செல்வா Palm Foundation நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பன்னீர் செல்வம், பட்டிபளை பிரதேச செயலக அனர்த்த பிரிவை சேர்ந்த கங்கா, கடுக்காமுனை, மகிழடித்தீவு தெற்க்கு, அம்பலாந்துறை வடக்கு கிராம சேவகர்கள், மற்றும் பட்டிபளை பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது தையல், சிறுகடை வியாபாரம், அரிசிமா வியாபாரம், அரிசி வியாபாரம், தயிர் வியாபாரம், மற்றும் கோழி வளர்பவர்களுக்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூபா.23000 பெறுமதியான உள்ளீடுகள் வழங்கப்படாது கடந்த வாரம் விவசாயம் சேனைப் பயிர் செய்கை, மரக்கறி பயிர் செய்கையாளர்களுக்காண உள்ளீடுகள் வழங்க்கப்பட்டது குறிப்பிடப் தக்கது.