சமாதான நீதவானாக சத்தியபிரமாணம்


பெரிய கல்லாறு சீனித்தம்பி கந்தசாமி மட்டக்களப்பு மாவட்டத்தின் சமாதான நீதவானாக கடந்த 12.11.2013 அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
N.M.M.Abdullah, Magistrate and Acting District Judge முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்
இவர் ஆரம்பக்கல்வியினை மட் /முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்திலும், க.பொ.சாதாரண தரத்தினை மட்/ வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும், க.பொ.உயர்தரத்தினை அம் /அக்கரைப்பற்று தேசியபாடசாலையிலும் பயின்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B,COM  பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்;
தற்போது அதிபர் தரம் SLPS II பெற்ற இவர் பட்டிருப்பு வலயத்திலுள்ள மட் ஸ்ரீ வெள்ளிமலைப்பிள்ளையார் அ.த.க.பாடசாலையில் அதிபராக பணிபுரிந்து வருகிறார். இவரின் சேவையினைப் பாராட்டி இவருக்கு சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா 2012 இல் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
மேலும் இவர் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் உடற்பயிற்சி, விளையாட்டுபயிற்சி ஆசிரியர் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவராகும். இது தவிர பொதுப்பணிகளில் மிகவும் விருப்புடன் தன்னை அர்ப்பணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.