கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினால் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை பெற்றார்களுக்கு உணர்த்தும் விழிப்பூட்டல் வீதி நாடகம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸால் ஆரம்பித்து வைககப்பட்டது.
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற இவ் வீதிநாடகமானது புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழக கலைஞர்களினால் நடிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இவ் வீதி நாடகமானது கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் 40இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக பணியகத்தின் தவிசாளர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் முதலமைச்சரின் செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது பணியகத்தின் அதிகாரிகள்,மாவட்ட செயலக அதிகாரிகள் கந்துகொண்டதுடன் பெருமளவான பொது மக்களும் பார்வையிட்டனர்.












