(உ.உதயகாந்த்)
இலங்கை
சமுர்த்தி அதிகாரசபையின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு
செயலமர்வொன்று கடந்த 12.11.2013, செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தின் நவரெட்ணராஜா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வுக்கு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், ஆலையடிவேம்பு
சமுர்த்தி மகா சங்கப் பணிப்பாளர் ரீ.பரமானந்தம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்
திருமதி.அருந்ததி மகேஸ்வரன், கிராமசேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்
என்.குலசேகரன் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரியின் சார்பில் பொலிஸ்
பரிசோதகர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில்
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துதல் சம்பந்தமாகத் தமது கருத்துக்களைப்
பகிர்ந்தனர். அதிலும் குறிப்பாக பிரதேச செயலாளர் தனது உரையில் ஆன்மீக
ஈடுபாட்டுடனான நீண்டகால அடிப்படையில் அமைந்த போதைவஸ்து பாவனையைக் குறைக்கும்
செயற்பாடுகள் பற்றிய கருத்துக்கள் இச்செயலமர்வில் சிறப்பிடம் பெற்றன.
இச்செயலமர்வில்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமமட்ட சமுர்த்தி
அபிவிருத்திச் சங்கத் தலைவிகள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












