அண்மையில் பாணமை கிராம தமிழ்வித்தியாலயத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்களால் அவரது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து போட்டோ பிரதி இயந்திரம், ஆசிரியர்களுக்கான கதிரைகள் மற்றும் அவரது வேண்டுகோளை ஏற்று லண்டன் ஏ. வடிவேல் (அரியம்) அவர்களது நிதியிலிருந்து 50 மாணவர்களுக்கான பாடசாலை பை, மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்கள்,
இன்று யுத்தஅனர்த்தம் மௌனிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்து விட்டது. இன்னும் எமது மக்களுக்கான எந்த ஒரு பிரச்சனையும் முழுமையாக தீர்ந்த பாடில்லை. குறிப்பாக எமது பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எல்லை கிராமங்கள் மட்டுல்லாது ஏனைய இடங்களும் பறிபோய்க்கொண்டே இருக்கின்றது.
இன்று எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கென்றே பலர் திட்டம் போட்டுக் கொண்டு செயற்படுவதை எமது கண்முன்னே காணக்கூடியதாக உள்ளது. பத்திரிகைகளும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஊடகங்களுக்கு மட்டும் அரசின் அமைச்சர, உறுப்பினர்களும் பேட்டியில் மட்டும் தமிழ் பிரதேசங்களில் பிரச்சனைகள் இல்லை நாம் அதைச்செய்தோம் இதைச்செய்தோம் என்கின்றனர். யுத்தம் மௌனித்த பின் தமிழர்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை அவர்கள் நன்றாகவே சந்தோசத்துடன் வாழ்வதாக கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் எதுவுமே இல்லை நமது இனம் மிகவும் அடிமட்டத்திலேயே இருக்கின்றது. எம்மிடம் மிச்சமாக இருப்பது கல்வி ஒன்றே இதில் நாம் கூடிய கவனமெடுக்க வேண்டும். இன்று லண்டனில் இருந்து அரியம் என்பவர் இந்த பாடசாலைக்கு இப்படி உதவியுள்ளார். இதே போன்று எமது வெளிநாட்டு உறவுகள் எமது மக்களுக்கு இப்படியான கல்வி போன்ற விடயங்களுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.