மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தாண்டியடிப் பாடசாலையில் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று இடம்பெறறது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவப்பயிற்சியின் மூலம் அவர்களை முன்னிலைப்படுத்தி பாடசாலை அதிபர் ஆர்.கிருஸ்ணபாலனின் வழிகாட்டலில் ஆசிரியை திருமதி ரோஜாரமணி இருதயநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆக்கத்திறன் கண்காட்சியில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம விருந்தினராகக் கரந்து கொண்டார்.
இதே வேளை பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா.சிறிநேசன்,மகேந்திரகுமார் கோட்டக் கல்விப் பணிப்பாளாட எஸ்.கணேசு ஆகியோர் கலந்துகொண்டனர்.












