வந்தாறுமூலை அகிலன் பவுண்டேசன் விசேடதேவைகள் உள்ள சிறுவர் நிலையத்தில் கலைவிழா

(வ.வரதன்)
வந்தாறுமூலை அகிலன் பவுண்டேசன் விசேடதேவைகள் உள்ள சிறுவர் நிலையத்தின் கலைவிழா வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வு அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மூ.கோபாலகிருஸ்ணன் தரைமையில் வீ.ஆர்.மகேந்திரன், கே.சுதாகர் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராசா,பா.அரியேந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின்போது சிறுவர்களுக்கும்,பெற்றொர்களுக்கும் பரிசில்களும் உணவுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.