(உ.உதயகாந்த்)
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் 68 ஆவது பிறந்தநாள் மற்றும் அவரது இரண்டாவது பதவிக்காலத்தின்
மூன்றாமாண்டு நிறைவுக்காலம் என்பவற்றை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக
சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ‘சிசுதிரிய’
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் கடந்த 25.11.2013, திங்கட்கிழமை நடைபெற்றபோது நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர்
கே.நேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட
முகாமையாளர் திருமதி.அருந்ததி மகேஸ்வரன்
அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஆலையடிவேம்பு
பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், பிரதேச தனவந்தர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை
மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றிய இந்நிகழ்வானது அதிதிகளை மாலையிட்டு வரவேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு
ஆரம்பமாகி சமுர்த்தி தலைமையக முகாமையாளரின் ஆரம்ப உரை, பிரதேச
செயலாளரின் சிறப்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து அளிக்கம்பை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர் எஸ்.பாக்கியராஜாவின் விளக்கவுரையும், தனவந்தர்கள் சார்பில்
எம்.லோகேந்திரனின் வாழ்த்துரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களுக்கான உதவி வழங்கும்
வைபவம் நடைபெற்றது.
இதன்போது பல சமுர்த்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தத்தமது பிரதேசங்களில் தங்களால் தெரிவுசெய்யப்பட்ட
மாணவர்களுக்கு அவர்களது சமுர்த்தி வங்கிச் சங்க சேமிப்புக் கணக்குகளில் தங்களால்
வைப்பிலிடப்பட்ட பணத்துக்கான பற்றுச்சீட்டையும் சேமிப்பு புத்தகங்களையும்
கையளித்ததுடன் அம்மாணவர்களுடைய வருடாந்த கல்விச்செலவுகளையும் பொறுப்பேற்றுக்கொண்டமை
இங்கு பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அத்தோடு பிரதேச தனவந்தர்கள் பலர்
முன்வந்து தங்களால் இயன்ற பண உதவிகளைத் தங்களது பிரதேசத்தைச் சேர்ந்த வறிய
மாணவர்களுக்கு அவர்களாகவே வழங்கியமை இந்நிகழ்வினை மேலும் சிறப்பாக்கியது. அத்துடன்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களும் தனது பங்கிற்கு
கற்றல் உபகரணங்களை அனைத்து மாணவர்களுக்கும் பரிசாக வழங்கியமையும் இங்கு
குறிப்பிடத்தக்கதொரு விடயமாக அமைந்தது.












