மட்டு. மாவடிமுன்மாரியில் கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ்கழகத்தினரின் சமூகநல பணிகள்.

கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில்; அண்மையில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் ஐம்பது விதவைப் பெண்களுக்கு உடுபுடவைகளும் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சிங்கப்பூர் லயன்ஸ் மாவட்ட ஆளுனர் லயன் சிங்கரத்தினமும், சிங்கப்பூர் ஹில்ஸ் லயன்ஸ்கழக தலைவர் லயன் ஜேம்ஸ் மற்றும் உறுப்பினர் லயன் சுப்பிரமணியமும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் லயன்ஸ் மாவட்டம 306 ஊ2 ஆளுனரவை உறுப்பினர்களும், கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் மட்டக்களப்பு லேடீஸ் லயன்ஸ்கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிங்கப்பூர் லயன்ஸ்கழகத்தினர் இப் பிரதேச மக்களின் வேண்டுகோளின்படி இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்குமுகமாக பொதுக்கிணறு ஒன்றினையும் அமைத்துத் தருவதற்கு இணங்கியுள்ளனர். இதற்கான பூர்வாங்கப் பணிகளை கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.