இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு மாபெரும் கைவினைக் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர் வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதிவரை கொழும்பு – பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியிலேயே இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் கைவினைக் கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினால் செ ய்யப்பட்ட கைவினை உற்பத்திப் பொருட்களும் காட்சிப் படுத்தப்படுத்தவுள்ளதாக இக்கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.கங்காதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டதிலும் ஏனைய மாவட்டங்களிலும் தமது அமைப்பின் மூலம் யுத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினைக் கொண்டு கைவினைப் பொருள் உற்பத்திகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட இந்த பெண்களின் உற்பத்திகளை சர்வதேசத்திற்கு உயர்த்துவதற்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள் பார்வையிடுவதற்குமாக அங்கு காட்சிப் படுத்துவதற்கு எமக்குக் கிடைத்தது மிகவும் பொருத்தமான சந்தர்ப்பம் எனக் இதனைக் கருதுகின்றேன்.
இதன் மூலம் கிழக்கில் யுத்தத்தினால் பாதிப்புற்று கைவினை செயற்றிட்டத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு ஒருசந்தர்ப்பமாக அமையும் எனவும் இதனைக் கருதுகின்றேன்.
பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு நடைபெறும் இம்மாபெரும் கைவினைக் கண்காட்சியில் இலங்கையில் நாலாபக்கமும் இருந்து உற்பத்திப் பொருட்கள் வரவுள்ளன. இதில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு அமைப்புக்களில் எமது அமைப்பும் ஒன்றாகும். எனவும் மட்டக்களப்பில் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.கங்காதரன் மேலும் தெரிவித்தார்.












