மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின விழா

(ஏ.எல்.எம்.சினாஸ் & தில்லை )
யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் இலங்கைக்கான சர்வதேச சிறுவர் தின விழா நேற்று (20.11.2013) திகதி காலை 9.30 மணிக்கு  அம்பாறை மாவட்ட கல்முனை கல்வி வலயத்தில் உள்ள மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.


நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி கலந்து சிறப்பித்தார்.


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யுனிசெப் நிறுவன இணைப்பாளர் எம்.எம்.நிபால் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம், சம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் , மற்றும் ஏனைய மாகாணக் கல்வி அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், ஊா்பிரமுகா்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனா். இங்கு சிறுவர் தின சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.