நவீன தொழில் நுட்ப சாத­னங்­களின் வரு­கை­ தம்மைத் தாமே அழித்துக் கொள்­வ­துடன் சமு­தா­யத்­தையும் சீர­ழித்­து­விடும்


இலங்­கையில் பதி­னாறு வய­துக்கு உட்­பட்ட பிள்­ளை­களில் 110 பேர் வரு­டாந்தம் தற்­கொலை செது கொள்­கின்­றனர். இதற்கு பிர­தான காரணம் பிள்­ளை­க­ளுக்கும் பெற்­றோ­ருக்கும் இடை­யி­லான உறவு தூர­மா­கி­யுள்­ள­மை­யாகும் என கல்­முனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஏ.டபிள்யூ. அப்துல் கபார் குறிப்­பிட்டார்.

கல்­முனை பொலிஸ் நிலையம், பெரிய நீலா­வணை விஷ்ணு மகா வித்­தி­யா­லய நிர்­வா­கத்­துடன் இணைந்து நடத்­திய பெற்­றோ­ருக்­கான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கு அதிபர் சிவ­மணி நற்­கு­ண­சிங்கம் தலை­மையில் மேற்­படி வித்­தி­யா­லய மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.


அவர் மேலும் பேசு­கையில்;- உலகில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு­களின் பிர­காரம் ஆபாச படங்­களை அதிகம் பார்க்கும் நாடாக இலங்கை உள்­ள­தென்ற அதிர்ச்சித் தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் எமது நாட்டின் கலை, கலா­சாரம், பண்­பாடு எந்த அள­வுக்குச் சென்­றுள்­ளது. இத­னை­யிட்டு நாம் ஆழமாகச் சிந்­தித்து எமது நாட்டை பாது­காத்து நல்­லொ­ழுக்கம் மிக்க பிர­ஜை­களை உரு­வாக்க தொழிற்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.
நவீன தொழில் நுட்ப சாத­னங்­களின் வரு­கை­யினால் எமது இளம் சிறார்கள் மிகவும் இள வயதில் கெட்ட செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதைக் காணலாம். கைய­டக்கத் தொலை­பேசி பாவனை, இணை­யத்­தள பாவனை, பேஸ்புக், தொலைக்­காட்சி பாவனை என்­பன தம்மைத் தாமே அழித்துக் கொள்­வ­துடன் சமு­தா­யத்­தையும் சீர­ழித்­து­விடும். இவை யாவற்­றுக்கும் பெற்­றோரே கார­ண­மா­க­வுள்­ளனர்.

அண்­மையில் கல்­முனை பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சாலை மாண­வர்கள் ஆபாச படம் பார்த்துக் கொண்­டி­ருந்த வேளையில், அவர்­களை கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்தோம். சில மாண­வர்­களின் கைய­டக்க தொலை­பே­சி­களை சோதித்­த­போது ஆபாச காட்­சி­களைக் கண்டு அவர்­களை கைது செய்து எச்­ச­ரித்து விடு­தலை செய்தோம். இவ்­வா­றான கண்­கா­ணிப்பை நாம் தொட­ர­வுள்ளோம்.
அன்று நாம் மாண­வர்­க­ளாக இருந்­த­போது ஆசி­ரி­யர்­களைக் கண்டால் பயந்து நடுங்­கினோம். ஆசி­ரி­யர்கள் தவ­று­களைக் கண்டு எம்மை தண்­டித்தால் வீட்­டிற்குப் போய் சொல்­ல­மாட்டோம். இவ்­வி­டயம் வீட்டில் தெரிந்தால் எமக்கு வீட்­டிலும் அடி, உதை விழும். இதனால் நாம் தவறு செய்ய துணி­ய­வில்லை. இதன் கார­ண­மாக சமு­தா­யத்தில் நல்ல நிலையில் உள்ளோம். ஆனால், இன்று ஆசி­ரியர் தப்பித் தவறி அடித்தால் அல்­லது கடிந்து கொண்டால் பொலிஸ் நிலை­யத்திற்கு மனித உரிமை ஆணைக்­கு­ழுவுக்கு பெற்­றோரும் பிள்­ளை­களும் செல்லும் நிலை உள்­ளது. மேற்­கத்­தேய கலா­சாரம் வேறு, எமது கலா­சாரம் வேறு , இறக்­கு­மதி செய்யப்­பட்ட சில முறை­மை­களால் எமது நாடு சீர­ழி­வதை பார்த்து கண்ணீர் வடிப்­பதை தவிர வேறு வழி­யில்லை.

ஒரு கிரா­மத்­தி­லுள்ள பாட­சா­லையின் ஒழுக்கம், கட்­டுப்­பாடு என்­பன சீர­ழிந்து விடு­மாயின் அக்­கி­ரா­மத்தின் ஒழுக்கம் கட்­டுப்­பாடு என்­பன சீர­ழிந்து விடும்.அக்­கி­ராமம் வன்­மு­றை­யா­ளர்­க­ளையும் விரும்பத் தகாத செயல்­களை புரி­கின்­ற­வர்­க­ளையும் கொண்ட சீர­ழிந்த கிரா­ம­மா­கி­விடும். ஆகவே, பெற்றோர் தமது பிள்­ளை­களை ஒழுக்­க­முள்­ள­வர்­க­ளாக வளர்த்­தெ­டுக்க வேண்­டு­மாயின் பாட­சா­லை­களின் ஒழுக்கம், கட்­டுப்­பாடு என்­ப­ன­வற்­றுக்கு தலை சாய்த்து ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டி­யது அவ­சியம்.
அன்று நாம் கூட்டுக் குடும்­ப­மாக வாழ்ந்­த­வர்கள். இன்று தனிக் குடும்­ப­மாக வாழ்­ப­வர்கள். தாயும் தந்­தையும் தொழி­லுக்கு சென்றால் பிள்­ளைகள் தனித்து விடும். அவர்­க­ளுக்கு அன்பு கிட்­டாது. சம வயது நண்­பர்­களின் அன்பு கிட்டும். அவர்­களின் ஆலோ­சனை அதலபாதா­ளத்­திற்கு இட்டுச் செல்லும். பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு அன்பு செலுத்­து­வ­தை­யிட்டு சிந்­திக்க வேண்டும்.
ஒரு சில குடும்­பங்­களில் தகப்பன் மதுப்­ப­ழக்கம் உள்­ள­வ­ரா­கவும் ஏன் தாயும் தகப்­பனும் மதுப்­ப­ழக்கம் உள்­ள­வர்­க­ளாயின் பிள்­ளை­களின் நிலை என்ன? தாயும் தகப்­பனும் வெளி­நாட்டில் வேலை செய்ப­வர்­க­ளாயின் அப் பிள்­ளை­களின் நிலை என்ன? இவ்­வா­றான சூழலில் பெற்­றோரின் கடமை என்­ன­வென்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது?

1960 இற்கு முற்­பட்ட காலத்தை நாம் ஒரு முறை மீட்டிப் பார்ப்­போ­மாயின், இலங்­கையின் சகல பாகங்­க­ளிலும் உள்ள அரச திணைக்­களம், கூட்­டுத்­தா­ப­னங்கள் என்­ப­வற்றில் தமிழர் ஒருவர் உயர் அதி­கா­ரி­யா­கவும் அங்கு பெரும் எண்­ணிக்­கையில் தமி­ழர்கள் உத்­தி­யோ­கத்­தர்­க­ளா­கவும் இருந்­தனர். இன்று நிலை என்ன? இவ்­வாறு தமி­ழர்­களின் கல்வி பின்­ன­டை­வா­ன­தற்கு கார­ணங்கள் என்ன என்று கூற நாம் வேண்­டி­ய­தில்லை.
இலத்­தி­ர­னியல் ஊடக சாத­னங்­களின் பாவ­னையால் இலங்­கையின் கலை, கலா­சாரம் பண்பாடு தினமும் சீரழிந்து செல்கின்றமை கவலை தரும் விடயமாகும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மற்று­மொரு ஆய்வின் பிரகாரம் நூறு பிள்ளைகளில் அறுபது பிள்ளைகள் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, பெற்றோர் தமது பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக உயர்வான நிலையில் பார்க்க ஆசைப்பட்டால் பாடசாலைகளில் மாணவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்க கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றார்.