கடந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாவக்கொடிச்சேனை, நெடுஞ்சேனை, கற்பானை, பத்தரக்கட்டை கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் திட்டத்தினை (கேயார் ) CARE சர்வதேசம் சேவாலங்கா ஊடாக அமுல்படுத்திவருகிறது.
அதன் ஒரு கட்டமாக சிறு கடை வியாபாரம் செய்யும் 16 பயனாளிகளுக்கு சிறு கடைகளுக்கான பொருள்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19.11.2013) CARE நிறுவன திட்ட இணைப்பாளர் சோபனராஜா தலைமையில் நடைபெற்றது, இன் நிகழ்வின் போது CARE நிறுவன திட்ட இணைப்பாளர் சோபனராஜா, Sevalanka திட்ட இணைப்பாளர் சதீஸ்வரன், பன்சேனை, பாவக்கொடிச்சேனை, கற்பானை, பத்தரக்கட்டை கிராமங்களைச் சேர்த்த மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பாவக்கொடிச்சேனைச் சேர்ந்த -10 பயனாளிக்கும், கற்பானைச் சேர்ந்த -03 பயனாளிக்கும், பத்தரக்கட்டைச் சேர்ந்த -02 பயனாளிக்கும், பன்சேனைச் சேர்ந்த -01 பயனாளிக்கும், சிறு கடைகளுக்கான பொருள்கள் வழங்க்கப்பட்டது, ஒவ்வொரு பயனாளிக்கும் 24000.00 ரூபாய் பெறுமதியான பொருள்கள் வழங்க்கப்பட்டது.