(சபா.விதூஷகன்)
இலங்கையில் இருக்கும் முருகதலங்களில் மண்டூர் முருகன் ஆலயம் சிறப்பு பெற்றுக்காணப்படுகின்றது. அதிலும் கந்தசஷ்டி விரதமானது மிகவும் சிறப்பானது எனலாம்.
இவ்விரத காலத்தில் திருசெந்தூர் புராணபடலம் பாடப்பட்டு பொருள் கூறப்படும். திருச்செந்தூர் புராணமானது இந்தியாவில் இருக்கும் திருச்செந்துர் முருகனாலயத்திலும் மண்டூர் முருகன் ஆலயதிலும் தான் பாடப்படுகிறது இது ஏனைய ஆலயங்களிலும் பார்க்க சிறப்புமிக்கதாகும்.

திருசெந்தூர் புராணாபடலத்தில் கூறப்படுவது போன்று கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாம் நாளான நேற்று(புதன்கிழமை) முருகப்பெருமானுக்கும்காஞ்சனை எனும் மான் ஈன்ற வள்ளி அம்மனுக்கும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் முன்னிலையில் வானவேடிக்கைகள் முழங்க திருக்கல்யாணம் மண்டூர் முருகன் ஆலயதில் நடைபெற்றது. இவ்வருடம் என்றும் இல்லாதவாறு அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்