(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை சிறுவர் நன்னடத்தைப் பிரிவும், மனித அபிவிருத்தி தாபனமும், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஏற்படும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புனர்வுச் செயலமர்வை நடாத்தியது.
இச் செயலமர்வு சம்மாந்துறை அல் மர்ஐhன் பெண்கள் பாடசாலையில் சம்மாந்தறை சிறுவர் நன்னடத்தைப் பிரிவு உத்தியோகஸ்தர் ஐனாப் ரபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வளவாளர்களாக சம்மாந்தறை சிறுவர் நன்னடத்தைப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெவ்வை, சம்மாந்தறை பிரதேச செயலக உளவளத்துனை உதவியார் எம்.ஜே. ஜறுன் அகியோர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளின் கட்டிளமைப்பருவம் அதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களாகிய நாம்; பாடசாலை இடைவிலகளை குறைப்பதற்காக எடுக்க வேண்டிய செயற்பாடுகள், ஆலோசனைகள் பற்றிய விளக்கினார்கள்.
இதில் மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் அவர்களும் கலந்து கொண்டு தாபன செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கமளித்தார்.












