தமிழ் மக்கள் சிறந்த தலைமைத்துவமொன்றை தேர்ந்தெடுக்காமையே பிரச்சினைகளுக்கு காரணம்

தமிழ் மக்கள் சிறந்த தலைமைத்துவமொன்றை தேர்ந்தெடுக்காமையே பிரச்சினைகளுக்கு காரணம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உதயகுமார்


தமிழ் மக்கள் சிறந்த தலை­மைத்­து­வத்­தினைத் தேர்ந்­தெ­டுக்­கா­மை­யி­னா­லேயே இன்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர் என கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர் மா. உத­ய­குமார் தெரி­வித்தார். தேசிய வாசிப்பு மாதத்தை முன்­னிட்டு களு­வாஞ்­சிக்­குடி பொது நூலக வாசகர் வட்­டத்­தி­னரால் நடத்­தப்­பட்ட புத்­தகக் கண்­காட்சி நிகழ்வு இரா­ச­மா­ணிக்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.
அந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,
கல்வி, பொரு­ளா­தாரம் போன்ற துறை­களில் எமது மக்கள் பின்­ன­டைந்­துள்­ளனர். அபி­வி­ருத்தி என்­பது கட்­டி­டங்­களை வைத்து எடை போடக்­கூ­டாது. இன்று கிழக்கு மாகா­ணத்தில் எத்­த­னையோ கட்­டி­டங்கள் கட்­டப்­பட்டு பாவ­னைக்கு உட்­ப­டுத்­தாமல் காணப்­ப­டு­கின்­றன. எமது மக்­களின் ஊக்­க­மின்­மையே இதற்கு காரணம்
இன்று எங்கு சென்­றாலும் குப்பைப் பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. குப்­பை­களை கழி­வாகப் பார்க்கக் கூடாது. அதனை வள­மாக மாற்ற நினைக்க வேண்டும். நினைத்தால் ஏதோ ஒரு வகையில் குப்­பைகள் பிர­யோ­ச­ன­ம­டை­கின்­றன. இதனை பச­ளை­யாக தயா­ரிக்கும் ஒரு முறை­யினை அம்­பாறை மாவட்­டத்தில் ஒரு நிறு­வ­னத்தின் உத­வி­யுடன் ஆரம்­பித்­துள்ளோம். இத­னையும் எதிர்­வ­ருங்­கா­லங்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் அமுல்­ப­டுத்­த­வுள்ளோம். இதன் மூலம் குப்பை பிரச்­சினை எதிர்­கா­லத்தில் தீர்த்து வைக்­கப்­படும். அடுத்து வீதி விளக்குப் பிரச்­சி­னையும் இன்று அனை­வ­ராலும் முன் வைக்­கப்­ப­டு­கின்­றது. இன்று வீதி விளக்­கு­களை அமைக்கும் பொறுப்­பினை முற்று முழு­தாக இலங்கை மின்­சார சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச சபைகள் வீதி விளக்­கு­களை அமைக்கக் கோரு­கின்ற போது அதற்­கான மின்­சாரக் கட்­ட­ணத்­தினை பிர­தேச சபை செலுத்த வேண்­டு­மென கேட்­கின்­றனர்.

இதுவே இன்று எழுந்­துள்ள பிரச்­சினை. இதனால் தான் வீதி விளக்­குகள் அமைப்­பதில் சிர­மங்கள் ஏற்­பட்­டுள்­ளன.
களு­வாஞ்­சிக்­கு­டியில் குப்­பைகள் கொட்டும் இடத்தில் முறை­யற்ற விதத்தில் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வ­தாக கிரா­மத்­த­லைவர் முன் வைத்த வேண்­டு­கோ­ளிற்­கி­ணங்க இதற்­கான நட­வ­டிக்­கையை நிச்­ச­ய­மாக மேற்­கொள்வேன். எமது மக்­க­ளி­டையே இன்று பங்­கு­பற்­று­தலும் பாராட்­டு­கின்ற தன்­மையும் குறைவ­டைந்து செல்­கின்­றது. இந்­நிலை மாற வேண்டும். மக்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும். இன்று எமது மக்கள் வாசிப்பில் ஈடுபடும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே நாம் வாசிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.