ஆலயத்தில் 1008 சங்குகள் வரிசையாக அடுக்கப்பட்டு பின்னர் யாக பூஜை நடைபெற்று மூலமுர்தியான ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதற்கு மேலாக களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுரவணையடியூற்று கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடம் ஏந்தி பக்தர்கள் கால்நடையாக சென்று களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயதிற்குச் சென்றடைந்தது. பின்னர் அவர்கள் ஏற்திச்சென்ற பாலினாலும் களுமுந்தன்வெளி மூலமுர்தியான ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர் தெ.தேவசுந்தரம் அவர்களின் தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரியைகள் மற்றும் அபிஷேக நிகழ்வுகள் யாவும் சிவ ஸ்ரீ சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.












