நாவலடி சேமக்காலையில் இடம்பெற்ற இறந்த ஆத்மாக்களை நினைவு கூறும் கல்லறைத் திருவிழா.

(உ.உதயகாந்த்)                                                                     கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தில் ஒன்றான இறந்த ஆத்மாக்களை நினைவு கூறும் கல்லறைத் திருவிழா நிகழ்வானது புனித இன்னாசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜீவராஜ் தலைமையில் கடந்த 2013.11.02 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் நாவலடி சேமக்காலையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் இறந்த ஆத்மாக்களின் உறவுகள் அவர்களை நினைவு கூறுமுகமாக சவகட்டிடங்களை பூக்களாலும் மெலுகுவர்த்திகளாலும் அலங்கரித்து அழகுபடித்தியிருந்தமையும் எம்மால் காணமுடிந்தது.

இங்கு எம்மை விட்டு பிரிந்த உறவுகளை மறந்துவிடாமல் அவர்களை நினைவுகூறி   அவர்களுக்காக கடவுளிடம் செபிக்குமுகமாக இடம்பெற்ற திருப்பலி நிகழ்வுகளில் அதிகளவிலான உறவுகள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.