இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சானாதிபதி தற்போது பதவியிலிருக்கும் மஹிந்த ராஸபக்ஷ அவர்களின் 68 வது பிறந்த தினத்தினையும் அவரது 5 வது வருட பதவி பூர்த்தி நிறைவினையும் முன்னிட்டு நடாத்தப்பட்ட தேசத்திற்கு நிழல் ,தயட்ட செவன நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக, சுற்றாடலைப் பாதுகாக்க தெரு மருங்கில் நிழல் விருட்சம்' எனும் கருத்திடத்தின் கீழ் நாடு பூராகவுமுள்ள பெருந் தெருக்கள் வலையமைப்பின் இருமருங்கிலும் 'நிழல் தரும் மர நடுகைத்திடம்' இன்று (15) காலை சுப நேரமான 10.03 மணிக்கு நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இந்நிகழ்வு பட்டிருப்பு – வெல்லாவெளி பிரதான வீதியின் கோவில்போரதீவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரெட்ணம், மாவட்ட பொறியியலாளர் ஏ.சி.நிசாருதீன், மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வ மதத் தலைவர்கள், எனப்பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.












